(19.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam | தமிழக செய்திகள் | Thanthi TV

x

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் சுமார் ஒன்றரை வயது உடைய இரண்டு ஆண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.


மதுரையின் பல பகுதிகளில் கிளிகள் வீடுகளில் வளர்ப்பதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த இரு வாரமாக வனத்துறையினர் வீடு வீடாக சென்று கிளிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி தற்போது வரை 600க்கும் மேற்பட்ட கிளிகள் மதுரை வனத்துறையில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் உடல் நலம் தேறிய பறக்கவிடப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஜூலை 17ஆம் தேதிக்குள் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும், மீறினால் வனத்துறை சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் கடந்த 12ஆம் தேதி உணவகத்தின் உரிமையாளர் தனது ஆப்பிள் செல்போனை கல்லா மேசையின் மீது வைத்துவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து பார்த்தபோது அவர் வைத்த இடத்தில் செல்போன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் உணவு ஆர்டர் செய்வது போல் உள்ளே வந்த முகமுடி அணிந்த மர்ம நபர் செல்போனை திருடி செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் சையத் அப்பாஸ் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.


ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே, திமுக ஊராட்சிமன்றத் தலைவர் சார்பில், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆயிரம் கிலோ தக்காளி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன், ஒன்றியக் குழு உறுப்பினர் மலர்விழி தமிழமுதன் ஆகியோர் தங்கள் வெளிச்சம் அறக்கட்டளை சார்பில், 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை வழங்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆதனூர் கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்