கல்லூரி மாணவியை நடுரோட்டில் வெட்டி வீசிய 2 இளைஞர்கள்.. வீட்டுக்கு செல்லும் வழியில் வெறிச்செயல் - பின்னணியில் காதல் விவகாரமா?

கல்லூரி மாணவி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவையே உறைய வைத்துள்ளது.
கல்லூரி மாணவியை நடுரோட்டில் வெட்டி வீசிய 2 இளைஞர்கள்.. வீட்டுக்கு செல்லும் வழியில் வெறிச்செயல் - பின்னணியில் காதல் விவகாரமா?
x

பெங்களூரு, சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஷி. 19 வயதான இவர், யெலஹங்காவில் உள்ள தனியார் கல்லூரியில் BA முதலாமாண்டு படித்து வந்தார். ராஷி எப்போதும் கல்லூரியிலிருந்து பேருந்தில் வருவார். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்வார். அதுபோலவே நேற்று மாலையும் ராஷி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு பைக்கில் அசுர வேகத்தில் வந்த 2 இளைஞர்கள், ராஷியை வழிமறித்துள்ளனர். ராஷி என்ன நடக்கிறது என யோசிப்பதற்கு முன்பாகவே, அவருக்கு சரமாரியாக வெட்டு விழுந்திருக்கிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற வரும் முன் அந்த இளைஞர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர்.


தகவல் கிடைந்த உடன் சம்பவ இடம் விரைந்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இளைஞர்கள் யார், கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரம் தான் என உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.கல்லூரி மாணவி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவையே உறைய வைத்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் இதே பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்த பயங்கரத்தால் பெங்களூரே நடுங்கி போயுள்ளது. இவ்வாறாக காதல் விவகாரத்தில் இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவது பெற்றோர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்