அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் - கைமாறும் 167 ஆண்டுகால பழமையான ஸ்விஸ் பேங்க்

x

அமெரிக்காவில் எஸ்விபி மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரு வங்கிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த கிரெடிட் சூயிஸ் பங்கு மதிப்பு மீண்டும் பெரும் சரிவை சந்தித்தது. கடந்த ஆண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்குகளை 10 சதவீதம் அளவிற்கு வாங்கிய சவுதி நேஷனல் வங்கியும், மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்ய போவதில்லை என அறிவித்தது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரெடிட் சூயிஸ் வங்கியின் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

கிரெடிட் சூயிஸ் வங்கி பிரச்சனையால் ஒட்டுமொத்த ஐரோப்பிய வங்கி சந்தையும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது

இந்நிலையில், சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் யுபிஎஸ் கிரெடிட் சூயிஸ் வங்கியை அந்நாட்டு மதிப்பின் படி, சுமார் 3 பில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்ற நிலையில், முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா, பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்