"திறமைக்கும் வசதிக்கும் சம்பந்தம் இல்லை"சாதித்த 16 வயது தமிழக செஸ் வீரர்.. 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக பிரனேஷ்

காரைக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரனேஷ், இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார். பெரும் பொருளாதார வசதிகள் இல்லாத குடும்பத்தில் இருந்து வரும் பிரனேஷின் தாயார் அங்கன்வாடியில் பணி புரிகிறார். அவரது தந்தை ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். தங்கள் மகன் இந்த உயரத்தை அடைந்தது மகிழ்ச்சி என அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.  

X

Thanthi TV
www.thanthitv.com