திடிரென கூடிய 1500 பேர்.. திக்கு முக்காடிய சைதாப்பேட்டை..

x

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி ஊக்குநர் பணியாளர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், மாதாந்திர தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்களின் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பணியாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் திக்கு முக்காடியது சைதாப்பேட்டை

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் aமற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்சா கூட்டமைப்பு நிறுவன தலைவர் அமல்ராஜ் தலைமையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் லட்சுமணன் கலந்து கொண்டனர்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒட்சா கூட்டமைப்பு நிறுவன தலைவர் அமல்ராஜ்,

12,525 ஊராட்சிகளிலும் 13,000 பணியாளர்கள் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும் இதுவரை அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் தரப்படவில்லை எனவும்

கிராம ஊராட்சிகளில் தனிநபர் இல்ல கழிவறை கட்டிக் கொடுத்த சுகாதார ஊக்குநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

குப்பைகளை தரம் பிரிப்பது,

பெண்களுக்கான மாதவிடாய் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது. நம்ம ஊர் சூப்பர் என்ற பல இதுபோன்ற திட்டங்களை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை எந்த சம்பளம் வழங்கப்படவில்லை.

2013 க்கு முன் நியமனம் செய்யப்பட்டு சிறப்பு காலமுறை ஊதியம் பெறாத தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோருதல்.

நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியார்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு பணிநேரத்தை மாற்றி ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் மாநில அளவிலான போராட்டத்தை நடத்துவோம் என ஒட்சா கூட்டமைப்பு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்