கல்குவாரியில் 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - கேரளாவில் பரபரப்பு

x

கல்குவாரியில் 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சட்ட விரோதமாக இயங்கிய குவாரியிலிருந்து ஆயிரத்து 500 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிரையக்காடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டம் அருகில் இயங்கி வந்த இந்த குவாரியில், வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கரிப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு போலீசார் சோதனை செய்த போது 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், குவாரியை நடத்தி வந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்