"ஒரு நாளைக்கு 150 சிகரெட்..."மனோபாலாவின் கடைசி நாட்கள் - மேலாளர்கள் சொன்ன தகவல்கள்

"ஒரு நாளைக்கு 150 சிகரெட்..."மனோபாலாவின் கடைசி நாட்கள் - மேலாளர்கள் சொன்ன தகவல்கள்
Published on

இயக்குநர் மனோபாலாவின் கடைசி நாட்கள் பற்றி அவரது மேலாளர்கள் சபரிநாதன் மற்றும் விக்னேஷ் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் மனோபாலாவின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அவரது மறைவை தொடர்ந்து அவரை பற்றி பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கின. அதில் பலரின் கேள்வியாக இருந்தது, மனோபாலா நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்பதுதான். இதற்கு பதிலளித்துள்ள சபரி மற்றும் விக்னேஷ், மனோபாலாவுக்கு BP சுகர் உள்ளிட்ட எந்த வியாதியும் இல்லையென்றும், எப்போதாவது காய்ச்சல் மட்டுமே வரும் என்றும் கூறியுள்ளனர்

மேலும், மனோபாலா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என பரவும் தகவல் வதந்தி என கூறியுள்ளனர். 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக ஒரு நாளைக்கு 150 சிகரெட் பிடிக்கும் பழக்கமிருந்த மனோபாலா அதன் பிறகு அறவே அந்த பழக்கத்திலிருந்து வெளிவந்துவிட்டார் என்றும், எப்போதாவது மது அருந்துவாரே தவிர, மதுவுக்கு அடிமை கிடையாது என்றும் கூறினர்.

கல்லீரலில் தொற்று ஏற்பட்டதால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டதாகவும் , 3 வேளை உணவை 10-லிருந்து 15 வேளையாக கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்த மேலாளர்கள் , மனோபாலாவை பற்றி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com