பேருந்து விபத்தில் 15 தொழிலாளர்கள் மரணம்... தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற போது விபரீதம்

x

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் சென்ற 15 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...

ஐதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்தடைந்த இவர்கள், உத்தர பிரதேசம் செல்ல கட்னி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்...

ரேவா மாவட்டம் சுஹாங்கி பஹாரி பகுதியில் பேருந்து சென்ற போது எதிர்பாராத விதமாக ட்ரக் மோதிய விபத்தில் 15 தொழிலாளர்கள் பலியாகினர்.

மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்