மணிப்பூரில் 142 பேர் கொடூர பலி.. 400 பேருக்கு நேர்ந்த பயங்கரம் - கலவரத்துக்கு என்ன தான் காரணம்?

x

மணிப்பூர் கலவரமும் அதனை தொடர்ந்து நடந்துவரும் மனித உரிமை மீரல்களும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ள நிலையில், மணிப்பூரில்கலவரத்திற்கான மூல காராணங்களை அலசுகிறது இந்தத் தொகுப்பு.

மியான்மர் எல்லைப் பகுதி அருகே உள்ள சின்னஞ்சிறிய வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் மே முதல் வாரத்தில் வெடித்த இனக் கலவரங்களில் இதுவரை 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

54,480 பேர் வீடுகளை விட்டு வெளியேறி, அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மூன்று இனக்குழுவினர்கள் வாழ்கின்றனர். நாகாக்கள் 24 சதவீதமும், குக்கிகள் 16 சதவீதமும், மைதேயிக்கள் 53 சதவீதமாகவும் உள்ளனர்.

தலைநகர் இம்பால் மற்றும் அதை சுற்று உள்ள சமவெளி பகுதிகளில் மைதேயிகள் வாழ்கின்றனர். மைதேயிகள் சனமஹி என்னும் பழங்குடி மதத்தை பின்பற்றுபவர்கள்.

அதைச் சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் தெற்கு பகுதியில் குக்கிகளும், வடக்கு பகுதியில் நாகாக்களும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கிருஸ்த்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குக்கிகளும், நாகாக்களும் பழங்குடியினராக வகைப்படுத்தப் பட்டு, இட ஒதுக்கீடு பெறுகின்றனர்.

பழங்குடியினர் மட்டுமே மலைப் பகுதிகளில் நிலம் வாங்க சட்டப்படி அனுமதிக்கப்படுகின்றனர்.

சமவெளியில் வசிக்கும் மைதேயிகள், மலைப் பகுதிகளில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்கவும் முடியாது.

ஆனால் மலைப் பகுதியில் உள்ள குக்கிகளும், நாகாக்களும், சமவெளியில் குடியேற அனுமதி உள்ளது.

குக்கி இனத்தவர்கள் மியான்மர் நாட்டிலும் அதிக எண்ணிக் கை வசிக்கின்றனர்.

மியான்மரில் அடக்குமுறைகள் மற்றும் வறுமை அதிகரித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக, மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக மணிப்பூர் மலைப் பகுதிகளுக்கு குடிபெயரும் குக்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில், மணிப்பூரின் பாஜக அரசு, மலைப்பகுதி யில் சட்ட விரோதமாக வசிக்கும் மியான்மரைச் சேர்ந்த குக்கிகளை அகற்ற நடவடிக்கைகளை தொடங்கியது.

அகதிகளை அகற்றுவது என்ற பெயரில், தங்களின் நிலங்களை பறிக்க பாஜக அரசு முயல்வதாக குக்கி இனத்தவர்கள் குற்றம் சாட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் 20 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம், மைதேயிகளை பழங்குடியினராக அறிவிக்கும்படி மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது.

மைதேயிகள் பழங்குடி அந்தஸ்த்து பெற்றால், மலைப் பகுதிகளில் நிலங்களை பெரிய அளவில் வாங்கி விடுவார்கள் என்று குக்கிகள் அச்சமடைந்தனர்.

மைதேயிகளுக்கு பழங்குடி அந்தஸ்தத்து அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, குக்கிகள் போராட்டத்தில் இறங்கினர்.

இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கலவரமாக வெடித்து, இன்று வரை அமைதி திரும்பவில்லை.


Next Story

மேலும் செய்திகள்