12 ஆயிரம் பேர் பணி நீக்கம்.. ஆனாலும் சுந்தர் பிச்சைக்கு மட்டும் இவ்ளோ சம்பளமா?

x

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஆயிரத்து 850 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி ஆல்பபெட் குழுமத்தை சேர்ந்த கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது. இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மட்டும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆயிரத்து 850 கோடி ரூபாய் சம்பளமாக சுந்தர் பிச்சை பெற்றிருப்பதாகவும், மாதம் ஒன்றுக்கு சுமார் 154 கோடி ரூபாய் அவர் சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்