கோவையில் காணமல் போன 12 வயது சிறுமி.. பொள்ளாச்சியில் மீட்பு

x

கோவையில் காணமல் போன 12 வயது சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சியில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுதாகரன் - சசிகலா தம்பதியின் 12 வயது மகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திட, மறுபுறம் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படங்களை பதிவிட்டு குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகளையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்தநிலையில், காணாமல் போன சிறுமி ஸ்ரீநிதி பொள்ளாச்சி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்