11ம் வகுப்பு மாணவி மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து.. ரோட்டிலேயே துடிதுடித்து பலி-வேலூரில் அதிர்ச்சி

x

வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி லாரி மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் சிறுமி மதுமிதா நேற்று இரவு 9 மணி அளவில் தொரப்பாடியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மாணவியின் மீது மோதியது. இவ்விபத்தில் மதுமிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்