இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10 -12-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மிக் ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது மத்திய குழு......

2 நாள் ஆய்வுக்கு பின், டிசம்பர் 12ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்....

----

9 நாட்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு...

4 மாவட்டங்களிலும் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலை இருப்பதாக கல்வித்துறை தகவல்...

----

போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்...

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிக்கல்...

---

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு...

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...

--

நாளை பள்ளிகள் திறக்கும் வகையில் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டுள்ளது...

தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டம் உள்ளதாகவும் ஷிவ்தாஸ் மீனா தகவல்...

---

புயலால் சேதமடைந்த சான்றிதழ்களை

கட்டணமின்றி வழங்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை சிறப்பு முகாம்...

சென்னை மாவட்டத்தில் 12ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது...

---

வெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர், மின்விநியோகம், போக்குவரத்து முழுமையாக சீரடைந்துள்ளது...

பள்ளிக்கரணையில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி...

---

புயல் மழையால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி சவாலாக உள்ளது...

குப்பைகள் அனைத்தும் நாளைக்குள் முழுமையாக அகற்றப்படும் என தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உறுதி...

--

சென்னை கொடுங்கையூர் அமுதம் நகர், காவேரி நகர், ராகவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்...

கறுப்பு நிறமாக மாறி இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமம்...

---

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 6,000 ரூபாய் நிவாரண தொகை ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும்...

டோக்கன் வழங்கி நிவாரண தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்...

----

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

---

மத்திய அரசில் உள்ள தங்கள் நண்பர்களிடம் பேசி ஈபிஎஸ் கூடுதல் நிதியை பெற்றுத்தந்தால் மக்களுக்கு வழங்கலாம்...

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

---


Next Story

மேலும் செய்திகள்