இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-03-2023)

x

சாமானிய வணிகர்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் இடையூறு செய்யக்கூடாது...வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா வலியுறுத்தல்....

விளையாட்டு துறை சார்பில், பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்...மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை...

அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையை 'விடுதலை' திரைப்படம் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளது...இயக்குநர் வெற்றிமாறனுக்கு, விசிக தலைவர் தொல் திருமாவளவன் பாராட்டு...

வேலூர் கோட்டையில் பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை மிரட்டி அகற்றி வீடியோவாக பதிவு செய்த விவகாரம்....கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரம்...

என்னை பார்க்க வர மாட்டீர்களா என கேட்ட சுட்டிக்குழந்தைக்கு இன்ப அதிர்ச்சி...சுட்டிக் குழந்தையிடம் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த நடிகர் விஜய்..

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும், மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம்...அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு...

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்...தமிழக அரசுக்கு வி.கே. சசிகலா வலியுறுத்தல்...

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.....5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கும்.....

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்....மாநில மகளிர் ஆணைய தலைவர் கேட்டுகொண்டதன் பேரில் வாபஸ் பெற்றதாக அறிவிப்பு...

பாலியல் புகார் தொடர்பாக, கலாஷேத்ரா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளதாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேட்டி..

கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை....


Next Story

மேலும் செய்திகள்