இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2023)

x

புதுக்கோட்டை அருகே பட்டாசு பட்டைறையில் தீ விபத்து...5 பேர் காயம்... மருத்துவமனையில் அனுமதி...

இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டுகளில் 13.13 லட்சம் சிறுமிகள், பெண்கள் மாயம்...அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் சுமார் 2 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 918 பேரும் மாயமானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்...

செங்கல்பட்டு அருகே மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் மகிதா அன்ன கிருஷ்டி கைது...தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது தனிப்படை...

லஞ்ச புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் சஸ்பெண்ட்...கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிமுத்துவிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை...

விளைந்த பயிர்களை அழிப்பதை விட ஒரு கொடுமை இருக்க முடியாது...நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம்...

என்எல்சியில் கால்வாய் அமைக்கும் பணியை, மத்திய அரசு கைவிட அண்ணாமலை வலியுறுத்தலாம் என, சரத்குமார் அறிவுறுத்தல்...என்.எல்.சிக்கு உதவும் நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மாற்றிக்கொள்ள வேண்டுமென, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்...

என்.எல்.சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி கண்டனம்....அன்னூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயமா? என கேள்வி.....

நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்...போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு...

சுரங்கம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி முக்கியமானது....பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் விளக்கம்...

பெரியார், கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக பாடுபட்டவர்கள்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

தமிழக ஆளுநர் நாள்தோறும் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்... அவரது பேச்சு நமக்கு பிரச்சாரம்...திராவிட இயக்க எழுத்தாளர் புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்