இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2023)

x

வானொலியில் ஒலிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி எந்த விதமான அரசியலும் பேசவில்லை...தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்...

வேலூரில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்தது பெருமைக்குரியது....மனதின் குரல் 100 வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு...

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு...பழைய குற்றாலம், மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்...

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்...அருவி போல் கொட்டும் அணையில் குளித்து மகிழ்ந்து குதூகலம்...

ஓகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்...நீர்வீழ்ச்சியில் குளித்தும், மசாஜ் செய்தும் மகிழ்ச்சி...

சுற்றுலா பயணிகள் குவிந்ததால், உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டியது....ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்...

தமிழகத்தில் வரும் 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்