இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-02-2023)

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night ஹெட்லைன்ஸ்

திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு....

ஆளுநர் ஆர்.என்.ரவி, தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது...கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் பேசிய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை...

தமிழ்நாட்டில் சமூக பதற்றத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்...பெரியார் இயக்கங்களை சார்ந்தவர்களை திட்டமிட்டு சீண்டுவதாகவும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்...டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது...கிளைமேக்ஸை எப்படி இப்போதே சொல்ல முடியும் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சூசகம்...

சென்னையில் முதல்வரின் 70 ஆண்டு பயண புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்....கட்சியில் படிப்படியாக உயர்ந்து உயர் பொறுப்புக்கு வந்தவர் முதலமைச்சர் என பாராட்டு...

நாளை 70ஆவது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து...நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வீடியோ வெளியிட்டு பெருமிதம்...

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா எம்.பி., வாழ்த்து...நீண்ட ஆயுள், நிறைய செல்வம், புகழோடு வாழ்க என வீடியோ வெளியீடு...

ஆட்சியின் சாதனைகளை சுட்டிக்காட்டியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது...முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் 70வது பிறந்த நாளை கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின்...கேக் வெட்டி உற்சாகம்...


Next Story

மேலும் செய்திகள்