இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2023)

x

நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம்...ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து போராட்டம்...

காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நாளை கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளதாக தகவல்...அதானி விவகாரம் மற்றும் ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்பு...

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்படவில்லை...மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...

வேலூரில் சுட்டெரிக்க தொடங்கியது வெயில்...அதிகபட்சமாக, இன்று 95 டிகிரியை கடந்து வெயில் பதிவு...

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு...குளிக்கச் சென்ற 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு மற்றும் வனத்துறை வீரர்கள்....

தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

மகளிர் ப்ரீமியர் லீக் டி.20 தொடரில், சாம்பியன் பட்டம் வென்றது, மும்பை அணி.....இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது....


Next Story

மேலும் செய்திகள்