இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2023)

x

ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைப்பு...

சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அதிமுகவினர் 5 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப்பதிவு

விஷ சாராய மரணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அதிமுக பேரணி...அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் ஊர்வலமாக சென்று ஆளுநரிடம் மனு அளிப்பு.....

திரைப்படங்கள் வாயிலாக சரத்பாபு என்றும் நினைவு கூறப்படுவார்...நடிகர் சரத்பாபு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்....

ஐதராபாத்தில் இருந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்படுகிறது சரத்பாபு உடல்...நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிப்பு

71 வயதான பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்...உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது...

பெட்ரோல் நிலையங்களில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும்...பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை...தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு...

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்....

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் நாளை வெளிநாடு பயணம்....8 நாள் சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை....வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்