இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-02-2023)

x

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு...நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்?...உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கேள்வி...

ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மூளை இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது...கார்ல் மார்க்ஸ் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம்...

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்ட 4 பேர் தப்பியோட்டம்...மாடியில் இருந்து கதவை உடைத்து, போர்வையை கயிறாக மாற்றி கீழே குதித்து தப்பியோடியதாக தகவல்... ஒருவர் பிடிபட்டார்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை...தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு...

2020ம் ஆண்டு சிறையில் ஆய்வுக்கு சென்ற பெண் காவலரிடம் அவதூறாக நடந்து கொண்டதாக வழக்கு...ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகனை மீண்டும் ஆஜர்படுத்த வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு....

ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் எதிரொலி...400-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கொல்கத்தா ஆய்வகம் உறுதி...

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்...முதலாவது அரையிறுதி போட்டியில் நாளை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை...

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு...பலியானோர் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு...

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இறுதி தீர்ப்பு வழங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்