இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2023)

x

கூட்டணி குறித்து மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது...தேசியத் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து...

கூட்டணி குறித்து பேச தமக்கு அதிகாரம் இல்லை , அதற்கான நேரம் விரைவில் வரும்...பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்துள்ளது...ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி...

பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

உயர்நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கருத்து...நீதி வெல்லும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்பு...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், முடிவுகளை மார்ச் 24ம் தேதி வரை வெளியிட கூடாது....பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நிறைவு...எடப்பாடி பழனிசாமியை அல்லாமல், 221 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு தாக்கல்... அதிமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி, தேர்வாக வாய்ப்பு....

தமிழக சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்....மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை....ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் வியப்பு.....

தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...சென்னை-புறநகர் பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்