இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2023)

x

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி மனு...தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை...தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து துணை தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்...

தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரும் நிதி பங்கு, சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது..தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்...

திமுக எம்பி திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கே.என். நேரு நேரில் சமாதானம்...நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூட்டாக பேட்டி...

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் மனு...பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக விரோதிகளால் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்...

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..நாளை வேட்பு மனுதாக்கல் தொடக்கம்...

சேப்பாக்கம் மைதானத்தில், புதிதாக அதமைக்கப்பட்டுள்ள கேலரியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது...

சென்னையில், 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தை திறந்த வைத்தார் முதல்வர் ​ஸ்டாலின்...நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்பு...

ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் அழித்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு....மோசமான நிலையில், நம்மை விட்டுச் சென்றதாகவும் ஆவேசம்...

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.....அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தல்.....

அதானி மற்றும் ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக 5வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி....இரு அவைகளும் 20ம்தேதி வரை ஒத்திவைப்பு....

சுகாதாரத்தை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றும் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை...நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் விளக்கம்...

பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்...பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு...

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை...தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து துணை தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்...

சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை....தரமணி பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால், மக்கள் உற்சாகம்...

சத்தியமங்கலம் அருகே தாளவாடி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை...

தமிழகத்தில் வரும் 20ம்தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்