இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பால் கொள்முதல் விலை உயர்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் போராட்டம்...

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு...


பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது...

ஒரு சில சங்கங்கள் மட்டுமே போராட்டம் அறிவித்திருப்பதாக அமைச்சர் நாசர் தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்...


அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன தொடர்பு? என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கேள்வி...

அதானி, ஸ்விஸ் வங்கி மேலாளருக்கும் இடையே நடந்தது என்ன? என்றும் வினா....


கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்...

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்...


கன்னியாகுமரியில், பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் மீது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு....

தலைமறைவான பாதிரியாருக்கு தனிப்படை போலீசார் வலை....

.தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

டாஸ்மாக், நியாய விலை கடைகள், தொழில் நடத்துபவர்களை சமூக விரோதிகள் தாக்குவது தொடர் கதையாக உள்ளதாகவும் விமர்சனம்...


தமிழகத்தில் நாளை முதல் 19ம் தேதிவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.....

மின்னல் ஏற்படும்போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....


பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த யானைக்குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி....

முதுமலை பொம்மன் - பெள்ளி தம்பதியிடம் ஒப்படைப்பு....


Next Story

மேலும் செய்திகள்