இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-07-2023)

x

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தல்....1957-ஆம் ஆண்டு சாத்தனூர் அணை திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு காமராஜர் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி, அறிவுரை

தெலங்கானாவில் மனைவியை கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவர்.....கோழிக் குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்ததால், ஆத்திரத்தில் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்.....

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடியில் துவரை, உளுந்து கொள்முதல் விலைக்கு விற்பனை...அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை தடுக்க குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாக உணவுத்துறை நடவடிக்கை.......

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஆன்லைன் வழி கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடக்கம்....ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவிப்பு....

கரூர், வீரணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் ரசாயனத்தை கலந்த 3 மாணவர்கள் கைது....தலைமை ஆசிரியர் மேல் உள்ள கோபத்தால் தவறு செய்ததாக பகீர் தகவல்......

வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில், 4 சிறார்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பெற்றோர் சம்மதம்.....

செந்தில் பாலாஜி வழக்கில், மூன்றாம் நீதிபதி கார்த்திகேயன் அளித்த தீர்ப்பினால் எந்த மாற்றமும் ஏற்படாது.....

செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிதிகளின்படியே கைது செய்துள்ளது.....சிகிச்சைக்கு பின் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என 3வது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு....

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு.....

சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியதன் மூலம் விண்வெளித்துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது......

நிலவில் விண்கலம் இறங்கும் நாளை எதிர்நோக்கியுள்ளதாக சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பேச்சு.....

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தம்....

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.....

பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு, போர் விமானங்களின் சாகசங்களை கண்டுரசித்தார்....

இந்தியாவும், பிரான்சும் 25 ஆம் ஆண்டுகள் ராஜாங்க ரீதியிலான உறவை கொண்டாடி வருவதாக பிரதமர் மோடி பேச்சு....

பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் நகரத்தில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி பேச்சு....


Next Story

மேலும் செய்திகள்