இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2023)

x

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 11 விமானங்கள்...சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 1 மணி நேரம் தவிப்பு...

சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மாலையில் இதமான சூழல்...

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பட்டண பிரவேசம்.....மனிதனை மனிதன் சுமப்பதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே சிறுகை பல்லக்கில் பட்டண பிரவேசம்....

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின்போது மின்தடை எதிரொலி...பாஜகவினர் போராட்டத்தால் பரபரப்பு...

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்...காலம் இருக்கிறது எனக் கருதாமல் உடனடியாக செயலாற்ற முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

2 ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்...சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியையே பார்த்துள்ளது...நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

வேலூரில் நாளை பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்...உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலின் கேள்வி...

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு...

கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு செய்த பணிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா பட்டியலிட தயாரா? சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்