இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-03-2023)

x

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை அணி அபார வெற்றி ....9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.........

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நீடிப்பார்....ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.....

என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.....25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக வரும் தகவல் உண்மை அல்ல என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உறுதி

அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க பரிந்துரை.....அமைச்சர் சிவசங்கர் தகவல்....

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..5 மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது நீட் தேர்வு.....ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு....

இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா 3-வது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்க முடியும்....பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி.....புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு.....

தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் பேட்டி...தமிழகத்தில் தற்போது 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பதாக தகவல்...

பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வதந்தி வீடியோ வெளியிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு....ஒருவரை கைது செய்து விசாரிக்கிறது பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்.....

தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பப்படுவது குறித்து வடமாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்...தமிழ்நாடு வந்துள்ள பீகார் குழுவினர் தகவல்...

சமூக நீதிதான் திராவிட இயக்கத்தின் முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதால் திமுக அரசை சிலர் எதிர்ப்பதாகவும் விமர்சனம்..


Next Story

மேலும் செய்திகள்