இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-05-2023)

x

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு...

திராவிட மாடல் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்....

ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான்.....

கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டு வெடிப்பு, வி.ஏ.ஓ படுகொலை போன்றவை நடக்கும் போது, தமிழ்நாட்டை எப்படி அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியும்?

பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்து, ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி......

திராவிட மாடல் காலாவதி என்றால் குஜராத் மாடல் என்ன ஆனது.....ஆளுநருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி....

திராவிட மாடல் என்ற வார்த்தை சிலருக்கு கடும் பயத்தை ஏற்படுத்துகிறது...சமூக நீதி கொள்கையில் தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி...

திராவிடல் மாடல் ஆட்சி குறித்து ஆளுநர் பேசியது எல்லை மீறிய செயல்...தமிழகத்தில் வெறுப்பையும், விஷமத்தையும் கக்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு...

தமிழ்நாட்டின் திராவிட மாடல், அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதி.....திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் திரிபு வேலைகளை அரசியல் கட்சிகள் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை...காலாவதியான ஒரு கொள்கையை தூக்கிப்பிடிக்கும் அரசியல் கோஷம் மட்டுமே என ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்