இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2023)

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்...முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு....

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்றும் விளக்கம்....

தஞ்சை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த கொடுமை....திருமணத்தில் பங்கேற்றவர்களை ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த அவலம்...

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்கிறார்கள்....தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி...

கோவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு...சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை...

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் ​சி.வெ.கணேசன் திட்டவட்டம்...தவறான உள்நோக்கத்துடன், வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பரப்பப்படுவதாகவும் விளக்கம்....

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவையில் பாஜகவினர் கடும் அமளி....வதந்தி என தமிழக டிஜிபி நிராகரித்துவிட்டதாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம்...

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து வணிகர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை....வணிகர்கள் பாதுகாப்பு சட்டம், சலுகைகள், சிறு குறு வணிகர்களுக்கு தேவையான வரி சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்....

மகளிருக்கு வாய்ப்பளிக்காத, மகளிரை பின்தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும், சமுதாயமும் வளர்ந்தது இல்லை....சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ஈரோட்டு திராவிடப் பாதை இந்தியாவிற்கே வழிகாட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை....இன்று ஈரோடு, நாளை நம் நாடு என்ற வெற்றிப் பயணம் தொடரும் என்றும் நம்பிக்கை...


Next Story

மேலும் செய்திகள்