இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2023)

x

வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல்.....இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு.....

கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியது....வருகிற15ம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் தகவல்....

ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு ....தலா 2 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு ....

ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்களை காப்பாற்ற சென்ற 3பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு....தவறி விழுந்த சிறுவர்களில் ஒருவரும் பலியான சோகம்

நடிகர் தனுஷ் மீது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் குற்றச்சாட்டு....நடிக்க இருந்த படத்தை, மீண்டும் நடித்து முடித்து தர வேண்டும் என முறையீடு.....

நடிகைகள் அமலா பால், ராய் லட்சுமி மீது தயாரிப்பாளர் சங்கம் பரபரப்பு புகார்....பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.. பாதுகாவலர்களுக்கும் சேர்த்து சம்பளம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.....

சிவன் ஆலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு கோலாகலம்.....திரளான பக்தர்கள் சாமி தரிசனம்....

கனகசபை விவகாரத்தில், அறநிலையத்துறையை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்....அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.....

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, குடியரசு தலைவருக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம்....ஜனநாயக மரபுகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு....

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு....வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை...

சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமை என ஆளுநர் ரவி பேச்சு..சனாதனம் என்பது அனைவரும் சமம் என வலியுறுத்துவதாக கருத்து...

எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பி.எஸ் திட்டவட்டம்....அந்த தவறை செய்ய மாட்டோம் எனவும் பேட்டி....

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....


Next Story

மேலும் செய்திகள்