இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2023)

x

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறைகள் குறித்து அறிக்கை அளியுங்கள்....தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....

இரு தரப்பு சம்மதத்துடன் விவாகரத்து பெற ஆறு மாத காலம் காத்திருக்க தேவையில்லை...உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

மதிமுக 30 ஆண்டுகளாக தனித்துத்தான் இயங்குகிறது, தொடர்ந்து தனித்தே இயங்கும்......மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், வைகோ பதில்......

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது...

12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதா திரும்பப் பெற்றது தொடர்பாக விரைவில் எழுத்து பூர்வமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்....

சட்டத்தை கொண்டு வந்தது துணிச்சல் என்றால் அதை இரண்டே நாளில் திரும்ப பெற்றதும் துணிச்சல் தான்...

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா வாபஸ்...மே தின பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....

நோட்டீசுக்கு பதில் தராததால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வரும் 8-ஆம் தேதி கிரிமினல் வழக்கு தொடுக்க உள்ளேன்....திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அதிரடி

பொது வாழ்வில் கடும் விமர்சனங்களை தாங்க, பகவத் கீதை அதிக வலிமையை வழங்கியது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..குருக்கள் ஞானிகளால் கூட பகவத் கீதையின் அர்த்தத்தை முழுமையாக அறிய முடியாது என்றும் அதிரடி

மதுரையில் நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்...மலர்களால் மணமேடை தயாராகும் நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விருந்து அளிக்கவும் ஏற்பாடு

மாநில எல்லைகளைத் தாண்டி இலவசங்கள், மதுபானங்கள், சட்டவிரோத பணம் போன்றவை செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது அமைச்சரவை கூட்டம்...அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இலாகாக்கள் மாற்றம் இருக்கும் எனத் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்