இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-03-2023)

x

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது...எதிர்க்கட்சிகளை ஸ்டாலின் ஒருங்கிணைப்பது மகிழ்ச்சி எனவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேட்டி...

எம்.பி. தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை.... யார் தலைமை தாங்குவது என்பதும் முக்கியமில்லை...அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு...

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்... வெற்றி பெறும்....காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி...

மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதற்காக அதனை தடை செய்ய மறுக்கிறார்களா?ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவது என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கியம்...பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்தியே ஆக வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை...

காங்கிரஸ் அல்லாத கூட்டணியோ, மூன்றாவது அணி என்பதோ எம்.பி. தேர்தலில் எடுபடாது...பாஜகவை வீழ்த்த தமிழகத்தை போல் ஒருங்கிணைந்த கூட்டணி அமைவது அவசியம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

---


Next Story

மேலும் செய்திகள்