10ம் வகுப்பு மாணவன் பிறப்புறுப்பில் தாக்கப்பட்டாரா? - மருத்துவ அறிக்கையில் பகீர் தகவல்

x

சென ்னையில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாணவன், கே.கே. நகரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

புதிதாக சேர்ந்த அந்த மாணவரின் மொழி, பாவனையை சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், பிரச்னை ஏற்பட்டு, அவரை சக மாணவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய தந்தை, கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடமும், குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 மாணவர்களிடமும் விசாரணை நடத்திய போலீசார், புகாரில் கூறப்பட்டுள்ளபடி, பள்ளி வளாகத்தில் தாக்குதல் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று கூறினார்.

மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, குழந்தைகள் நல ஆணையத்திடம் தெரிவித்திருப்பதாகவும் போலீசார் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்