10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... பெற்றோருக்கு அமைச்சர் வைத்த வேண்டுகோள்

x

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டு முதல்முறையாக அரசு பள்ளிகளில் இருந்து பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ சேரக்கூடிய மாணவர்களை கண்டறிய அவர்களுடைய பள்ளி தகவல் மேலாண்மை எண் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தோல்வி அடைந்த மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்