102 வயது பாட்டியின் உடலால் ரெண்டான ஊர்.. அதிகாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்ததால் பரபரப்பு

x

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய, இருதரப்பினரிடை வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னூர் அடுத்த காரேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 102 வயதான ரங்கம்மாள் என்ற மூதாட்டி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இவரது உடல், அருகில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது.

அப்போது உடலை அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

தகவலின் பேரில் வந்த போலீசார், இருதரப்பினரிடமும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விடியற்காலை 4.30 மணி அளவில் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்