தாத்தா விட்டுச் சென்ற நேர்த்திக் கடனை தொடரும் பேரன் -1017 படிகள் உருண்டு உலக அமைதிக்காக சாமி தரிசனம்

x

அய்யர்மலையில் புகழ்பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயிலில், சோமவார விழாவை முன்னிட்டு இளைஞர் ஒருவர் உலக அமைதி வேண்டி ஆயிரத்து 17 படிகள் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆயிரத்து 17 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 4வது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் ஆயிரத்து 17 படிக்கட்டுகள் உருண்டு ஏறிச் சென்று வழிபட்டார். இவரது தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும் இதேபோல் வேண்டி வந்த நிலையில், அவர் மறைந்ததை அடுத்து, தாத்தாவின் வேண்டுதலை நிறைவேற்ற தொடர்ந்து 13 வது முறையாக ஜீவானந்தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்