பொது வெளியில் கொட்டப்பட்ட 1000 டன் கழிவுகள்... அதிரடி நடவடிக்கை எடுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தந்தி டிவி செய்தி எதிரொலி

x

திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம், அபாயகரமான துத்தநாக பித்தளை கழிவுகளை திறந்த வெளியில் கொட்டி வந்தது.

இதனால் ஏற்படும் அபாயம் குறித்து பிப்ரவரி 18ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை கவனித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, திறந்த வெளியில் கொட்டப்பட்ட சுமார் 1000 டன் துத்தநாக பித்தளை கழிவுகளை உடனடியாக அகற்றினர்.

அந்த நச்சு கழிவுகள் அனுமதித்த இடத்திற்கு எடுத்து செல்லாமல் வேறு இடத்தில் கொட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்