"1000 பவுன் தங்கம் பத்தவில்லை"... மாமனாரிடம் ரூ.100 கோடி சீட்டிங் செய்த மருமகன்...

x

கேரளா ஆலுவா நகரை சேர்ந்தவர் அப்துல் லாஹிர் ஹாசன். இவர் துபாயில் மிகப்பெரிய அளவில் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லாஹீர் ஹாசன் தன் மகளை காசர்கோடைச் சேர்ந்த முகமது ஹாசிப் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஏற்கனவே லாஹிர் ஹாசன் சுமார் ஆயிரம் சவரன் நகைகள் கொடுத்து மகளை திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணத்திற்கு பின் அமலாக்க துறை மருமகனுக்கு விதித்த அபாரத பணம், சொந்த தொழில் துவங்க முதலீட்டு பணம், சொகுசு கார் என மொத்தம் 100 கோடி அளவில் மருமகனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை எல்லாம் தற்போது வரை திரும்ப தரவில்லை என்றும், இதையெல்லாம் பெற்று கொண்ட பின்பும் தன் சொத்துகளை அபகரிக்க முயல்வதாக கூறி மருமகன் மீது போலீசில் புகாரளித்தார்.

இதில், காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என லாஹிர் ஹாசன் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, வழக்கை விரைந்து விசாரிக்க கொச்சி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்