திடீரென வெளுத்து வாங்கிய ஆழங்கட்டி மழையில் நனைந்த 100 பேர் காயம் - பதற வைக்கும் காட்சிகள்

x

இத்தாலியில் திடீரென கொட்டித்தீர்த்த ஆழங்கட்டி மழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெனிடோ மாகாணத்தில் டென்னிஸ் பந்து வடிவில் ஐஸ்கட்டி மழை வெளுத்து வாங்கியது. இதைப் பார்த்து ஆர்வமுடன் நனையச் சென்ற நூறுக்கும் மேற்பட்டோர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஸ் கட்டிகள் விழுந்ததில் ஏராளமான கார்களும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்