"100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு?" - கலெக்டரிடம் நேரடியாக புகார் கொடுத்த வார்டு உறுப்பினர்கள்

x

"100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு?" - கலெக்டரிடம் நேரடியாக புகார் கொடுத்த வார்டு உறுப்பினர்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்துள்ளனர். வேலைக்கு வராமலேயே 80 பேரின் பெயர்கள் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்ய வேண்டும், கிராம சபை கூட்டத்தில் தகவல் பலகையில் குறிப்பிட்டப்பட்ட வரவு, செலவு கணக்குகள் பொய்யாக இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்