மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.12.2022)

x

'நம்ம ஸ்கூல்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில் புதிய திட்டம் தொடக்கம்...

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும்....நம்ம ஸ்கூல் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்குழுவினர் பேரணி....ஊர்வலமாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை.....நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்..

பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்த ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு...மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரம்....

நடுக்கடலில் தாய்லாந்து போர்க்கப்பல் மூழ்கி விபத்து....73 பேர் மீட்கப்பட்ட நிலையில், 33 பேரை தேடும் பணிகள் தீவிரம்...

உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக வென்றது, அர்ஜென்டினா.....பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில், பிரான்சை வீழ்த்தியது....

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை...அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளதாக கேப்டன் மெஸ்ஸி உறுதி...



Next Story

மேலும் செய்திகள்