மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2022)

x

எரிசக்தி துறை சார்பில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள்....காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை....அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்....

33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் புயல் பாதிப்பு நிவாரணம்......கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததும் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு ..

பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்....உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தஞ்சாவூரில் பேட்டி.....

பொங்கல் பரிசுத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.....தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்...

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையே தேசிய விளையாட்டு போட்டி.....மாணவர்களுடன் கலந்துரையாடி, ஊக்கப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி .....

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் மும்முரம்....ஜனவரி 15ல் அவனியாபுரம், பாலமேட்டில் 16ம் தேதி, அலங்காநல்லூரில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு.....

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு....தேவைக்கேற்ப கூடுதல் முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு....

அரியலூர் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ....குற்றம்சாட்டப்பட்ட போலீஸ், விசாரணை குழுவில் இடம்பெறவில்லை என்பதை உறுதிசெய்ய காவல்துறைக்கு உத்தரவு....

ஈரோட்டில் முதன்முறையாக, நடமாடும் எரிதகன வாகன சேவை அறிமுகம்.....மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியது.....

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிரிழப்பு....கோவையில் பத்து லட்சத்தை இழந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை.....

நெல்லை மாவட்டம், அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானுக்கு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேச தகுதியில்லை.....ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேச பேச்சு....


Next Story

மேலும் செய்திகள்