இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-06-2023)

x

ஒட்டுமொத்த இந்தியாவை தங்களின் தேசமாக ஆக்குவதற்கு முயற்சிப்பவர்கள், இந்துத்துவ அரசியலை முன் வைத்து செயல்படுகின்றனர்...விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு...

திமுக 18 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தும் ஏன் ஒரு எய்ம்ஸ் கூட ஏன் கொண்டு வரவில்லை?....9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் சிறப்பான ஆட்சியாக இருக்கிறது எனவும் அமித்ஷா பெருமிதம்...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 குழு அமைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

தமிழகத்திற்கு இதுவரை 2 லட்சத்து ௪௭ கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொடுத்துள்ளார், பிரதமர் மோடி...முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா பதில்...

தமது வெளிநாட்டு பயணத்தால், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன...போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என தமது வழியில் பணிகள் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

சென்னை வந்தபோது மின்தடை ஏற்பட்டது.. தமிழகம் இருளில் தான் இருக்கு என்பதை தான் காட்டுகிறது...பாஜக வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்றும் தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேச்சு...

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...

கோடை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து வரும் பொதுமக்கள்...செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு...புத்தகம், சீருடை உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை...

23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனை....அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.....

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்....இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை வீழ்த்தி அபாரம்....


Next Story

மேலும் செய்திகள்