1 ரூபாய்க்கு விலை போகும் 1 கிலோ குடைமிளகாய்.. "நியாயமே இல்லை..."-குமுறும் பஞ்சாப் விவசாயிகள்

x

1 கிலோ குடைமிளகாய் வெறும் 1 ரூபாய்க்கு விலை போவதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் அனைத்து குடை மிளகாய்களையும் சாலையில் கொட்டிச் செல்லும் அவலம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. பஞ்சாபில் மான்ஸா, பெரோஸ்பூர், சங்ரூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் குடைமிளகாய் முதன்மை தோட்டக்கலை பயிராக பயிரிடப்படுகிறது. சந்தையில் 15 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படும் ஒரு கிலோ குடைமிளகாய்க்கு உரிய நியாயமான விலை கிடைக்காமல் ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... இதனால் சாலையில் கொட்டி அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்