ஒரு மணி நேரத்தில் சாக்கடை நீர் வெளியேற்றம் சரி செய்யப்பட்டது - தந்தி செய்தி எதிரொலி

x

தந்தி டிவி-யில் செய்தி வெளியாகி ஒரு மணிநேரத்தில் கரூர் மாநகராட்சியில் சாக்கடை நீர் சாலையில் வெளியேற்றப்படுவது சரிசெய்யப்பட்டது.

கரூரில் அரிஸ்டோ கார்னர், பழைய பேருந்து நிலையம், ராயனூர் பகுதிகளில் சாக்கடை வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடப்பதால் சாக்கடை கழிவுநீரை அப்படியே சாலையில் விடப்பட்டது.

இதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறுவதை தடை செய்து சாலையின் குறுக்கே சிமெண்ட் பைப்புகள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதை ஊழியர்கள் சரிசெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்