இன்றைய தலைப்பு செய்திகள் (06-01-2023) | 7 PM Headlines

x

"இலக்கியத் திருவிழா தொடக்கம்"

சென்னையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....

முதன்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவ படிப்புக்கான 6 நூல்களையும் வெளியிட்டார்....


அதிமுக வழக்கு - காரசார வாதம்

அதிமுக பொதுக்குழு வழக்கின் மீது 3வது நாளாக காரசார வாதம்....

விசாரணையை மீண்டும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்...


பதவி காலாவதியாகிவிட்டதா?

கட்சி விதிகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அதிமுக பொதுக்குழுவை கூட்டியுள்ளனர்.

இரட்டை தலைமை பதவி காலாவதியாகி விட்டதா என்பதே பிரதான கேள்வி என்றும் ஒபிஎஸ் தரப்பு வாதம்...

ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு.....

தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்...

ஆளுநர் தொடர்ந்து சர்ச்சை நாயகனாக இருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்று, டி.டி.வி. தினகரன் கருத்து....

பெயரை மாற்றச்சொல்ல ஆளுநர் யார்?

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்ல ஆளுநர் யார்?

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் சரமாரி கேள்வி...

"பிரிவினை வாதம் கூடாது"

தமிழ்நாடு, தனி நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது......

சில அரசியல்வாதிகள் பேசி வருவதால், ஆளுநரும் அப்படி பேசியுள்ளார் என தமிழிசைசவுந்தரராஜன் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்