50,000 நீர் நிலை பணிகள்.. - அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி

x
  • மத்திய அரசின் சார்பில் 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 41 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 9 முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
  • சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 திட்டங்கள், ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் தலா ஒரு திட்டம் ஆகியவைக் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்போது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்
  • . அமிர்த சரோவர் எனப்படும் நீர் நிலைகள் இயக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்த பிரதமர், 50 ஆயிரம் நீர் நிலைகள் தொடர்பான பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்