"நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." ராணுவ அணிவகுப்பில் பங்கேற்று இன்ப அதிர்ச்சியளித்த கிம்

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக காணாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட அடுத்த கிம்மாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் தனது மகளுடன் கிம் ஜாங் உன் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்