"திமுகவிடம் அதிமுகவை அடகு வைக்க பார்க்கிறார்" | "முடிஞ்சா ஈபிஎஸ் கூட மோத சொல்லுங்க" | ஓபிஎஸ்-ஐ சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

x

அதிமுகவின் தனித்தன்மை சீர்குலைக்கவும், கட்சியை திமுகவிடம் அடகு வைக்கவும் ஓ.பன்னீர் செல்வம் முயற்சி செய்வதாக அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனது அரசியல் வாழ்வு சூனியமாகி விட்ட ஆற்றாமையில் ஓபிஎஸ் பேசி வருகிறார் என்று கூறியுள்ளார். ஓபிஎஸ்-க்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தகுதியும், திறமையும் இருந்தால் தனிக்கடை தொடங்கி, ஈபிஎஸ் உடன் மோதிப் பார்க்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்