"ஓ..! காலைல பைனான்ஸ்.. மிட்நைட்ல பைக் தூக்குறதா..?"வளைத்து பிடித்த பப்ளிக்..! போலீசாரை கிறுகிறுக்க வைத்த இளைஞர்கள்

x

மாத தவணை கட்டாததால் நள்ளிரவில் பைக்கை எடுத்துச் செல்ல வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மழவந்தாங்கலைச் சேர்ந்த சிவக்குமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் மூலம் மாத தவணையில் உயர் ரக பைக்கை வாங்கியுள்ளார். முழுமையாக பணம் கட்ட முடியாததால் வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவரிடம் விற்றுவிட்டு மீதி தவணையைக் கட்டுமாறு கூறியுள்ளார்... லட்சாதிபதி தொடர்ந்து மாதத்தவணை கட்டி வந்த நிலையில், 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பணம் கட்டாததால் இரவு 11 மணிக்கு லட்சாதிபதியின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பைக்கை பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் எடுக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் திடீரென பைக்கை எடுக்க முயன்றதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களைத் திருடர்கள் என நினைத்து கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து இளைஞர்களை சுற்றி வளைத்து, செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்