பாக். கிறிஸ்தவ பள்ளியில் காவலர் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 9 வயது சிறுமி பலி - அதிர்ச்சி சம்பவம்

x

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள மங்களூரில் இப்பள்ளி அமைந்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மன நல பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்